செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களுக்கு அரசாங்கம் பொறுப்பு சொல்ல வேண்டும் - UNP

 

சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களுக்கு அரசாங்கம் பொறுப்பு சொல்ல வேண்டும் - UNP


 

நாட்டில் இடம்பெற்று வரும் துஸ்பிரயோக சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு சொல்ல வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 700 சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்தக் குற்றச் செயல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு சொல்ல வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் இந்த நாட்டை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றிக் காட்டுவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்ததாகவும், அதனையே தற்போது அமுல்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர் பாலியல் துஸ்பிரயோகச் சம்பவங்கள் அன்றாடம் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பாலியல் வன்முறைக் குற்றச் செயல்களுடன் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அதிகளவில் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் தொதாடர்புகளை வைத்திருக்கும் குற்றவாளிகளுக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கூடட்மைப்பு சார்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.