விசேட மொழியாக்கம் குளோபல் தமிழ்ச்செய்திகள்
அரசாங்கத்தை கவிழ்க்க போராட்டம்நடத்தப்படும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனநாயக வழிமுறைகளில் அரசாங்கத்தைகவிழ்ப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரேபிய கிளர்ச்சியைப் போன்று இலங்கை மக்கள்அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் தம்மையும் தமது குடும்பத்தையும்தண்டித்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதாகவம் அவர்தெரிவித்துள்ளார்.
இலங்iகை தனிமைப்படுத்துவதனை விடுத்து,நடைபெறும் குற்றச் செயல்களை தடுக்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க சர்வதேச சமூகம்முன்வர வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சர்வாதிகார ஆட்சி முறைமை நீடித்தால் மனிதஉரிமைகள் மீறப்பட்டால் மக்களை பாதுகாக்க சர்வதேச சமூகம் பங்களிப்பை வழங்க வேண்டுமெனஅவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆளும் கட்சி அரசியல்வாதிகள் பாரியளவில்குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை எனதொடர் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
லிபியாவைப் போன்று இலங்கையில் குழப்பங்கள்ஏற்படக் கூடாது என்பதே தமது வேண்டுதல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்ததொடர்ந்தும் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தை வெற்றியீட்டிய பெருமை அனைவரையும்சாரும் எனவும், திட்டமிட்டு தாக்குல்களுக்கு தலைமை வகித்தமை பெருமிதம் அளிப்பதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவினர் தம்மை பின்தொடர்ந்துசெல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். திருமண விருந்துபசாரங்களுக்கு சென்றால் கூட புலனாய்வுப்பிரிவினர் பின் தொடர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையிலi;ல என அவர்தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில்அரசாங்கம் உரிய பதிலளிக்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு குற்றச்சாட்டையும் எதிர்கொள்ளத் தயார்எனவும், பொதுமக்கள் நிலைகள் மீது படையினர் தாக்குத்ல் நடத்தவில்லை எனவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி: டெய்லி ரெலிகிராப்,
நாய் கடித்தால் நாயைக் கடிப்பது போல எவரையும் நாங்கள் பழிவாங்க போவதில்லை – சரத் கொன்சேகா
மக்களுக்கு தாம் வழங்கிய உறுதிமொழியை அப்படியே நிறைவேற்றுவதாகவும் அந்த உறுதிமொழிகளை நிறைவேற்றும் நாளில், நாட்டில், பகையுணர்வு மற்றும் குரோதத்தில் பீடிக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் செல்ல வேண்டிய இடத்தை மக்கள் கூறுவார்கள் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
30 வருடங்களாக நாட்டில் நடைபெற்ற கொடிய பயங்கரவாத யுத்ததத்தை முடிவுக்கு கொண்டு வர எனக்கு பலம் கிடைத்தது.அதன் பின்னர் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிட்டேன். 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவேனே அன்றி, அதில் இருந்து பின்வாங்க போவதில்லை. போர் நடைபெற்ற காலத்தில், இராணுவ தளபதியாக எனக்கு கீழ் பணியாற்றி, பாரிய சேவைகளை செய்த சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 20 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
எவ்வித சிறப்புரிமைகளும், வழங்காது, அவர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்து, அவர்களின் குடும்பங்களை நடு வீதியில் நிற்கும் நிலைமைக்கு தள்ளியே அந்த அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கினர். இவ்வாறான நிலைமைக்கே இந்த நாட்டை அரசியல்வாதிகள் கொண்டு செல்கின்றனர்.எனினும் அவற்றினால் நாங்க தைரியத்தை இழந்து விட மாட்டோம்.
நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை எப்போதாவது எப்படியாவது, ஜனநாயக வழியில் சென்று நிறைவேற்றுவோம். நாய் கடித்தால், நாயை கடிப்பது போல எவரையும் நாங்கள் பழிவாங்க போவதில்லை. அதற்கான தேவையுமில்லை. நாட்டை உரிய இடத்திற்கு இட்டுச் சென்ற பின்னர், அந்த அரசியல்வாதிகள் எங்கு செல்ல வேண்டும் என்பதை மக்கள் கூறுவார்கள் எனவும் சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.