செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

தமது கோரிக்கைக்கு இணங்கா விட்டால் இறுதிச் சந்தர்ப்பத்தில் துரும்புச்சீட்டு பயன்படுத்தப்படும் - SLMC

 

தமது கோரிக்கைக்கு இணங்கா விட்டால்  இறுதிச் சந்தர்ப்பத்தில் துரும்புச்சீட்டு பயன்படுத்தப்படும் - SLMC
 
தமது கோரிக்கைக்கு இணக்கம் ஏற்படவில்லை என்றால், இறுதிச்சந்தர்ப்பத்தில் துரும்புச்சீட்டை பயன்படுத்த போவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஜாதீன் தெரிவித்துள்ளார்.
 
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமது கட்சி, ஆளும் கட்சியுடனும் மேலும் சில கட்சிகளுடனும் தற்போது பேச்சுவார்;த்தைகளை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் முதலமைச்சர் பதவி மற்றும் போனஸ் ஆசனத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
எனினும் இதற்கு அரசாங்கமோ, ஏனைய அரசியல் கட்சிகளோ எந்த பதிலையும் இதுவரை வழங்கவில்லை. இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், இதனை எதிர்கொள்ள துரும்புச்சீட்டை கையில் வைத்து கொண்டு இருப்பதாகவும் இறுதிச்சந்தர்ப்பத்தில் அதனை பயன்படுத்த போவதாகவும் ரிஜாப்தீன் குறிப்பிட்டுள்ளார்.
 
அனுப்புக Home, Muslims
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.