பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில்நம்பிக்கையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும்நோக்கில் அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழு யோசனையை முன்வைத்துள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும்நடவடிக்கைகளை காலம் தாழ்த்தும் நோக்கில் அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழு யோசனையைமுன்வைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தெரிவுக்குழு யோசனைத் திட்டத்தில் பங்கேற்கும் என நம்புவதாக அண்மையில் ஊடக அமைச்சர்கெஹலிய ரம்புக்வெல்ல வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பதுதொடர்பில் நேற்று வரையில் தீர்மானிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் சுட்டமைப்புடன் இணக்கப்பாடுகளைஏற்படுத்திக் கொள்ள முடியாத அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம்எ எவ்வாறு தீர்வைஎட்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு எவ்வாறு அதிகாரம்பகிரப்பட வேண்டும் என்பது குறித்து அரசாங்கத்திடம் ஏற்கனவே கூட்டமைப்பு தெளிவுபடுத்தியுள்ளதாகக்குறிப்பிட்டுள்ளார்.