விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

முன்னாள் போராளிகள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடமுடியும் - பாதுகாப்புச் செயலாளர்

 

முன்னாள் போராளிகள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடமுடியும் - பாதுகாப்புச் செயலாளர்

 

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்களில் போட்டியிட முடியும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
புனர்ழ்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள்எதிர்வரும் காலங்களில் நடைபெறும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட முடியும் எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகள் மற்றும் முன்னாள் போராளிகளுக்குபுதிதாக அமைக்கும் காவல் நிலையங்களில் கடமையாற்ற சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னாள் சிரேஸ்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் தேசிய மற்றும் மாகாணஅரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும், அதேபோன்று எதிர்வரும் காலங்களில் முன்னாள்போராளிகளுக்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
நாட்டில் அமைக்கப்பட்டிருந்த சகல சோதனைச் சாவடிகளும் வீதித்தடைகளும் அகற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
பிரிவினைவாத நோக்கங்களுக்கு துணை போகும் ஒரு சில சர்வதேச ஊடகங்கள்இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
 
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமாதான முயற்சிகள் தொடர்பில்சர்வதேச சமூகத்திற்கு போதியளவு விளக்கம் அளிக்க்பபட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
இதேவேளை, புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் நாட்டுக்கு எதிராகசெயற்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் மேஜர் ஜெனரல் எச்.கெ.ஜீ. ஹெந்தாவித்தாரனதெரிவித்துள்ளார்.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.