செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

ஈழவிடுதலைப் போராட்டத்தை காசியானந்தனின் கவிதைகள் வலுப்படுத்தியது- பா.அரியநேத்திரன்

 

ஈழவிடுதலைப் போராட்டத்தை காசியானந்தனின் கவிதைகள் வலுப்படுத்தியது- பா.அரியநேத்திரன்

 

 
இலங்கையில் ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் 1974 ஆம் ஆண்டுகளில் கவிஞர் காசி ஆனந்தனின் கவிதைகள் பல இளைஞர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட ஊன்றுகோலாக இருந்தது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

 

இலங்கையில் ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் 1974 ஆம் ஆண்டுகளில் கவிஞர் காசி ஆனந்தனின் கவிதைகள் குறிப்பாக “பத்துத் தடைவ பாடை வராது” “சோற்றுப் பானையில் காமம் உண்டோ சும்மா வயிறு நிரப்பவோ பிறப்போமென்ற” அந்தக் கவிதை அளப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது அதனூடாக பல இளைஞர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட ஊன்றுகோலாக இருந்தது.

நேற்று மட். அரசடித்தீவு விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற கவிஞர் மேராவின் “மனக்காடு” கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பா.அரியநேத்திரன் மேலுள்ளவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் இலக்கியங்களில் ஆண்பால் கலைஞர்கள் பெண்பால் கலைஞர்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாக இருந்தது சங்ககாலம் தொடக்கம் இன்று வரையும் இருபாலாரும் அளப்பெரும் சேவையாற்றியிருக்கின்றார்கள்.

ஏனைய மொழிகளுடன் நாம் ஒப்பிடுகையில், மூன்று வயதில் ஒரு கவிதையை அதாவது தோடுடைய செவியன் விடையேறியோர் என்ற தேவாரத்தை திருஞானசம்பந்தர் தமிழில் பாடி தமிழுக்கு பெருமை சேர்த்திருந்தார்.

3 வயது பாலகன் தொடக்கம் 100 வயதில் உள்ள ஒரு தாத்தா வரையும் தமிழுக்காக உழைத்திருக்கின்றார்கள் தமிழை வளப்படுத்தியிருக்கின்றார்கள்.

ஆனால் இவை காலத்திற்குக் காலம் இலக்கியம் சார்ந்த கவிதைகள் அவை சார்ந்த விடயங்கள் மக்கள் மத்தியில் பலவாறான விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கின்றது.

உதாரணமாக நாங்கள் கூறுவோமாக இருந்தால் காதல் கவிதை தேச விடுதலைக் கவிதை சமூகத்தை நல்வழிப்படுத்துகின்ற கவிதை என்று பல்வேறுபட்ட கோணங்களில் அந்த கவிதை மூலமாக சமூகத்தில் தாக்கம் ஏற்பட்டிருக்கின்றது.

குறிப்பாக இந்தியாவின் சுப்பிரமணிய பாராதியார் பாடிய அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடல் அதுபோன்ற கவிஞர் பாரதிதாசன் இயற்றிய கவிதைகள் என்பன அந்தக்காலத்தில் இந்தியாவின் விடுதலைக்கு உந்து சக்தியாக அமைந்தது.

அதுபோல் இலங்கையில் ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் 1974 ஆம் ஆண்டுகளில் கவிஞர் காசி ஆனந்தனின் கவிதைகள் குறிப்பாக “பத்துத் தடைவ பாடை வராது” “சோற்றுப் பானையில் காமம் உண்டோ சும்மா வயிறு நிரப்பவோ பிறப்போமென்ற” அந்தக் கவிதை அளப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது அதனூடாக பல இளைஞர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட ஊன்றுகோலாக இருந்தது.

அதுபோன்றுதான் கவிதையின் தாக்கமென்பது வெறுமனே நாங்கள் படித்துச் சுவைத்துவிட்டு செல்வதற்கான ஒரு நிகழ்வாக அல்லாமல் அதில் வருகின்ற விடயங்கள் சமூகத்தில் இணைகின்றபோது பல மாற்றங்களை கொண்டுவரக்கூடிய ஒரு நிகழ்வாக இருக்க வேண்டும்.

ஆனால் இந்த மாற்றங்களை நாங்கள் கொண்டுவருவோமாக இருந்தால் அல்லது தமிழை கலையை கலாச்சாரத்தை பண்பாட்டை நாங்கள் பேணிப்பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் அந்த விடயங்களின் ஒரு உந்து சக்தியாக தமிழழை வளர்க்கக்கூடிய தமிழை தொடர்ச்சியாக பாதுகாக்கக்கூடிய அந்தச் சக்திகளுக்குப் பின்னால் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைவதன் மூலம்தான் நாம் எமது இல்லத்தையும் தமிழையும் பண்பாட்டையும் காப்பாற்றக்கூடியதாக இருக்கும்.

இன்று மேரா அவர்கள் வெளியிட்ட இந்த கவிதைத் தொகுதியிலே ஒரு கவிதையை நான் பார்த்திருந்தேன். பல்லிகளைக் கொல்லாதே என்ற தலைப்பிலே அந்தக் கவிதை எழுதப்பட்டிருந்தது பல்லிகளைக் கொல்லாதே என்று எழுதிவிட்டு அதைக் கொல்லும் விதமாகத்தான் அந்தக் கவிதைவரி இருந்தது.

ஆனால் இப்பொழுது வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஒரு வசனம் போடப்பட்டிருக்கின்றது “சிறைச்சாலையில் இருப்பவர்களும் மனிதர்கள் தான்” என்று. ஆனால் இவ்வாறு பொருள்பட வசனத்தைப் போட்டுவிட்டு அதே சிறைக்குள் தமிழ் அரசியல் கைதிகளை படுகொலை செய்கின்ற ஒரு கேவலமான நடவடிக்கை எமது நாட்டில் இடம்பெற்றிருக்கின்றது.

நேற்று முன்தினம்கூட வவுனியா சிறையில் இருந்து 21 கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு கடுமையான முறையில் தாக்கப்பட்டு அதனால் நிமலரூபன் என்ற அரசியல் கைதி கொழும்புக்கு மாற்றப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

அவ்வாறு கொலைசெய்யப்பட்டவரின் அந்த உடலைக்கூட பெற்றோரிடம் கொடுக்க முடியாத ஒரு சூழலில்தான் இன்று தமிழர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இது சமாதான காலமென்று அரசு கூறினாலும்கூட இந்த சமாதான காலத்தில் இவ்வாறான நாசகார நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஆகவே இவற்றையெல்லாம் இல்லாமல் செய்ய வேண்டுமாக இருந்தால் இன்றைய இந்த நிலை என்பது 64 வருட காலத்தில் அகிம்சையாக அல்லது ஆயுதப் போராட்டமாக நடாத்தி விடுதலைபெற முடியாதென்பதால் இன்று இராஜதந்திர ரீதியானதொரு போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்த இராஜதந்திர போராட்டத்தில் நாங்கள் வெற்றிபெற வேண்டுமாக இருந்தால் அந்த வெற்றிக்காக உழைக்கின்ற அந்தச் சக்திகளுக்குப் பின்னால் அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்துவதன் மூலம் மட்டும்தான் எமது இலக்கை அடைந்து நாம் வெற்றியீட்ட முடியும் அதற்கு அனைவரும் கூட்டமைப்பின் பின்னால் ஒன்றுதிரள வேண்டும்.

எனவே நாங்கள் மேராவின் கவிதையில் கூறப்பட்ட பல விடயங்களை உற்றுநோக்குவோமாக இருந்தால் அவைகளை அடைவதற்கு ஒரு நின்மதியான வாழ்க்கை அல்லது ஒரு தீர்வைப் பெறவேண்டிய சூழ்நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.

ஆகையால் இந்த விடுதலையை அடைவதற்து தமிழ் தேசிய கூட்டமைப்பினைப் பலப்படுத்தி அதன் பின்னால் நாம் அனைவரும் அணிதிரள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கவிதை நூலை பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வெளியிட்டு வைத்தார். இந்நிகழ்வு பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்திதி ஒன்றியத்தின் அணுசரணையுடன் தலைவர் கே.கங்கா அவர்களின் தலமையில் நடைபெற்றது.

இதில் வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் கே.பேரின்பராசா ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.