சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான சட்டங்களை விதிப்பது குறித்து நீதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் பதில் செயலாளர் அசோக அலவத்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறுவர் துஸ்பிரயோக குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைஅரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடுமையான சட்டங்களை விதிப்பதன் மூலம் மட்டுமே சிறுவர் துஸ்பிரயோகசம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும் என அதிகாரசபையின் தலைவர் அனோமா திஸாநாயக்கதெரிவித்துள்ளார்.
2012ம் ஆண்டில் இதுவரையில் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள்தொடர்பில் 20000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதேவேளை, கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் குற்றச்செயல்களை தடுக்க முடியும் என ஊடக அமைச்சர்கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.