ஆளும் கட்சி அரசியல்வாதகளின் அதிகார மோகத்தினால் மக்கள்நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
அக்குரஸ்ஸ தங்கல்ல பிரதேசங்களில் ஆளும் கட்சி அரசியல்வாதிகள்சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்தகருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
'சிறுவர் சிறுமியர் வீதியில் இறங்கி நடக்கமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது' என ஜனாதிபதியே சொல்ல வேண்டிய ஓர் பாரதூரமான நிலைமைஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மையான மக்கள் பொருளாதார நெருக்கடிகளினால்பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாரியளவிலான கொள்ளைச் சம்பவங்கள் நாட்டில் இடம்பெற்று வருவதாகத்தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கத்திடம் பணமில்லை என்றபோதிலும் கேளிக்கைகளை நடாத்த வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ள போதியளவு பணம்காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் நீண்ட காலத்திற்கு ஆட்சியில் இருக்காது எனகயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.