நான் தொடர்ந்தும் கைதியாகவே இருக்கின்றேன் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு வெளிக்காட்டிக் கொள்ளும்வகையில் தம்மை விடுதலை செய்த போதிலும் தொடர்ந்தும் கைதியாக வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக உரிமைகள் முடக்கப்பட்டுள்ளதாகசுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயக உரிமைகளை மீள நிலைநாட்டுவதற்காக போராடி வருவதாகக் குறிப்பிட்டு;ளளார். இராணுவ நீதிமன்றில் அளிக்கப்பட்ட தண்டனைக்குஎதிரான மேன்முறையீட்டு வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைத்தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கத்துடன் தொடர்புடைய அடிமட்டஅரசியல்வாதிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கைகுற்றவாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.