செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

மட்டக்களப்பில் சிறப்புப் பட்டம் பெற்றவர்களையும் பட்டதாரி நியமனத்தில் சேர்த்துக்

 

கொள்ளுமாறு கோரிக்கை!

மட்டக்களப்பில் சிறப்புப் பட்டம் பெற்றவர்களையும் பட்டதாரி நியமனத்தில் சேர்த்துக்

 

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப்பட்டம் பெற்று வெளியேறியுள்ள பட்டதாரிகளையும்; பட்டதாரி நியமனத்தில் சேர்த்துக்கொள்ளுமாறு மாணவர்கள் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
 
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறப்புப் பட்டப்படிப்பை மேற்கொண்ட மாணவர்களையும் பட்டதாரி நியமனத்தில் சேர்த்துக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மாணவர்கள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
 
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறப்புப் பட்டப்படிப்பை மேற்கொண்டு கடந்த 2011ம் ஆண்டு பல்கலைகழகத்தை விட்டு நாங்கள் வெளியேறிய போதும் ஒரு சில பாடங்களுக்கான பரீட்சைமுடிவுகளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தங்களுக்கான தரநிலைச்சான்றிதழில் 2012ம் ஆண்டு திகதியிடப்பட்டுள்ளதாகவும் இருந்தும் தாங்களும் ஏனைய பட்டம்பெற்ற மாணவர்களுடன் கல்விபயின்ற போதும் சிறப்புப் பட்டப்படிப்பை மேற்கொண்டதன் காரணமாகவே தாங்கள் ஒருவருடம் பின்தள்ளப்பட்டதால் சிறப்புபட்டம் பெற்ற தங்களையும் மேற்படி பட்டதாரி நியமனத்தில் சேர்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
 
பொதுப்பட்டம் பெற்றவர்களுக்கும் மற்றும் வெளிவாரியாகப் பட்டம் பெற்றவர்களுக்கும் பட்டதாரி பயிலுனர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள போதும் அவர்களை விட ஒருவருடம் மேலதிகமாக பல்கலைகழகத்தில் பயின்று சிறப்புப்பட்டம் பெற்ற தங்களுக்கு தரநிலைச்சான்றிதழில் 2012ம் ஆண்டு திகதியிடப்பட்ட ஒரேகாரணத்திற்காக தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக இவர்கள் கவலை தெரிவித்துள்ளதுடன் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்து தங்களுக்கும் பட்டதாரிபயிலுனர் நியமனங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.