தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம்கட்சிகள் இணைந்து போட்டியிடக் கூடாது என அகில இலங்கை முஸ்லிம் காங்கரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்தவொரு முஸ்லிம் அரசியல் கட்சியும் இணைந்து போட்டியிடக் கூடாது என அகில இலங்கைமுஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எல்.ஏ.எம்.அஷ்ரப் ஒருபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடமாட்டார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது னஎ அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, முஸ்லிம் மக்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் கூட்டணி சேரும் கட்சிக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என அவர் நம்பிக்கைவெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் ஏதேனும் இரகசிய இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவ்வாறு இரகசிய இணக்கப்பாடு ஏற்படுத்திக ;கொள்ளப்பட்டிருந்தால் அது முஸ்லிம் மக்களின் நன்மைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்காது எனவும், அது வெறும் அரசியல்வாதிகளுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் எனவும் ஹமீட் குற்றம் சுமத்தியுள்ளார்.