செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

வட மாகாணசபைத் தேர்தல்கள் வெளிப்படையானதாக அமைய வேண்டும் - பசில் ராஜபக்ஷ

 

வட மாகாணசபைத் தேர்தல்கள் வெளிப்படையானதாக அமைய வேண்டும் - பசில் ராஜபக்ஷ

 

வட மாகாணசபைத் தேர்தல்கள் வெளிப்படைத்தன்மையுடையதாகவும், மிகச் சரியானதாகவும் அமைய வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
2013ம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில் நியாயமான முறையில் வடக்கில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தக் கூடிய சாத்தியம் ஏற்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
வடக்கில் நடைபெறும் முதலாவது மாகாணசபைத் தேர்தல்மிகவும் சிறந்த முறையில் நடத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
 
தேர்தல்களை நடாத்தி குற்றச்சாட்டுக்களை சுமக்க நாம் தயாரில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வடக்கில் தேர்தல்களை நடாத்த வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
தேர்தல்களை நடாத்தத் தேவையான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெயர்ந்தமக்களில் 95 வீதமானவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
எவ்வாறெனினும், அதற்கு முன்னர் இடம்பெயர்ந்தமூன்று இன சமூகங்களையும் சேர்ந்த மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தேர்தல்களை நடாத்தத் தேவையான சூழ்நிலையைஉருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இல்லையென்றால், இடம்பெயர் மக்களின்வாக்குரிமையை அரசாங்கம் முடக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த மூன்று தசாப்த காலமாக வடக்கு மக்களின்ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
சகல அரசியல் கட்சிகளும் நியாயமான முறையில்பிரச்சாரங்களை மேற்கொள்ளக் கூடிய ஓர் பின்னணியை உருவாக்க வேண்டியது அவசியமானது என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
 
உரிய காலத்தில் தேர்தல்களை நடாத்துவது மிகவும்அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
10-07-2012, 16:17
 - Posted by Siva.
இந்தத் பசில்க்..யின் தொல்லை தாங்க முடியவில்லை! வடக்கில், மாசு மறுவற்ற தேர்தல் நடத்தப் போகின்றாராம்! ஏதோ தெற்கில், இது வரை நடத்திய தேர்தல்களில் எவ்வித முறைகேடுகளோ அன்றி குற்றச் சாட்டுக்களோ சுமத்தப் படவில்லை, என்பது போல் கீலா விடுகிறார்! கடந்த மூன்று தசாப்தங்களில், அதாவது 80 களில் இருந்து, குறைந்தது பதினைந்து தேர்தல்களையாவது, நாடும், வடக்கு மக்களும் சந்தித்திருக்கிறார்கள், வாக்களித்திருக்கிறார்கள்! இவற்றின் மூலம் சட்டரீதியாக, ஜனாதிபதிகள், பா. உறுப்பினர்கள், முதலமைச்சர், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் தெரிவு செய்யப்பட்டு, நாட்டை வழிநடத்தி (?) இருக்கிறார்கள்! இது கூடத் தெரியாத இந்தத் தம்பி, மூன்று தசாப்த காலமாக வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப் பட்டிருந்ததாகக் கதை அளக்கிறார்! தேர்தல்களை நடாத்த எந்த வித சூழ்நிலையை இவர் உருவாக்க எதிர்பார்க்கிறார், என்பது ஒன்றும் பரகசியமல்ல! அண்மைய தேர்தல்களில்,அரசியல் கட்சிகள் நியாயமான முறையில் பிரச்சாரங்களை மேற்கொள்ள, தடையாக இருந்தவர்கள், ஆளும் தரப்பினரும் அவர்களின் துணைக் குழுக்களுமே, என்பதை எல்லோரும் அறிவார்கள்! எதையும் யதார்த்தமாகவோ அன்றி நம்பும்படியாகவோ பேசுகிறார்களா என்றால், அது இல்லை என்பதே, பதிலாகும்!
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.