செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

மாகாண சபைத் தேர்தல்களை கண்காணிக்க சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை பணியில்

 

ஈடுபடுத்துமாறு ஐ.தே. க கோரிக்கை

மாகாண சபைத் தேர்தல்களை கண்காணிக்க சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை பணியில்
 :
 
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களை கண்காணிக்க சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சிகளின் செயலாளர்களை சந்தித்த போது, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க  இந்த கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையாளர் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை வரவழைப்பது குறித்து ஆராய்ந்து பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
 
 
அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை எதிர்பார்க்க முடியாது எனவும் இதனால் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுத்தி அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.