விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

யாழ் மாவட்டத்தில் புதிய முதலீடுகளை மேற் கொள்வதில் பிரிட்டன் தூதுவர் அக்கறை – அரச அதிபர்

 

யாழ் மாவட்டத்தில்  புதிய முதலீடுகளை மேற் கொள்வதில்  பிரிட்டன் தூதுவர் அக்கறை – அரச அதிபர்

 

 
யாழ்.மாவட்டம் தற்போது முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் அதற்கான உதவிகளை வழங்குவதிலும் புதிய முதலீடுகளை இங்கு மேற் கொள்வதிலுமே பிரிட்டன் தூதுவர் அதிக அக்கறை செலுத்தியதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
 
 யாழ்.மாவட்டத்துக்கு நேற்று சென்றிருந்த இலங்கைக்கான பிரிட்டன் தூதர் ஜோன் ராப்கின் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் யாழ். மாவட்ட அரச அதிபர் ஆகியோருடன் அவர் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார்.
 
அரச அதிபருடன் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற சந்திப்புத் தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அரச அதிபர், யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்வற்காகவே பிரிட்டன் தூதுவர் வந்திருந்தார்.
 
விவசாயம், மீன்பிடி, கைத்தொழில், சுற்றுலாத்துறை, கால்நடை வளர்ப்பு போன்ற துறைகளில் யாழ்.மாவட்டத்தில் எம்மால் செய்யப்பட்டு வருகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அவருக்கு விளக்கமளித்தோம்.
 
இதில் யாழ்.மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க துறைகள் முன்னேற்றப் பாதையில் செல்வதை கவனத்தில் எடுத்த தூதுவர் அந்தத் துறைகளை மேலும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தினார்.
 
சுற்றுலாத்துறை தொடர்பிலும் யாழ்.மாவட்டத்தில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பிலும் அதிகளவு அக்கறை காட்டிய அவர் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பிலும் ஆராய்ந்தார்.
 
 
அத்துடன் யாழ்.போதனா வைத்திசாலையின் கண் சிகிச்சை, இருதய சிகிச்சை நிலையம் என்பவற்றுக்கான நவீன உபகரணங்கள் தேவை என்பது தொடர்பிலும், வீடமைப்பு வசதிகள் தேவை என்பது தொடர்பிலும் விவசாயிகளுக்கான சந்தை வாய்ப்புகள் குறித்தும் அவரிடம் எடுத்து விளக்கினோம் என தெரிவித்துள்ளார்.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.