விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

துமிந்த சில்வா தொடர்பான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

 

துமிந்த சில்வா தொடர்பான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு


 

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தொடர்பான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு முல்லேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் துமிந்த சில்வா படுகாயமடைந்தார்.

இந்த சம்பவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்பு நீதிமன்றில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாரதவின் குடும்பத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு தொடர்பான விசாரணைகளின் போது நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

சிங்கப்பூர் வைத்தியசாலை ஒன்றில் துமிந்த சில்வா சிகிக்சை பெற்றுயு வருகின்றார்.

துமிந்தவின் மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 24ம் திகதி மீள நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.