சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குசெல்ல முயற்சி செய்த 82 புகலிடக் கோரிக்கையாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இரண்டு படகுகளில் குறித்த நபர்கள் அவுஸ்திரேலியாநோக்கிப் பயணம் செய்துள்ளனர்.
78 ஆண்களும், இரண்டு பெண்களும், இரண்டுசிறுவர்களும் இந்தக் குழுவில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில்இந்த இரண்டு படகுகளும் மீட்கப்பட்டுள்ளன.
கடற்படையினரின் டோரா ரோந்துப் படகுகள்கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது இந்தப் படகுப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குசெல்ல முற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது குறித்த நபர்கள் தெரிவித்ததாககடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.