இலங்கையில் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பலவந்தமான காணாமல்போதல் சம்பவங்களை தடுக்கும் செயற்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் குறித்த ஐக்கிய நாடுகள் செயற்குழுவின் 97ம் அமர்வுகள் இன்றைய தினம் நிறைவடைந்துள்ளது.
13 காணாமல் போதல் சம்பவங்கள் குறித்து அவசர கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளதாகவும், மேலும் 200 காணாமல்போதல் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை தொடர்பான ஐந்து நிபுணர்களினால் முறைப்பாடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், அல்பானியா, அல்ஜீரியா, பங்களாதேஷ்,கொலம்பியா, இலங்கை சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, தஜிகிஸ்தான்,யேமன், மியன்மார் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து பலவந்தமான காணாமல்போதல் சம்பவங்கள்தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.