விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

வடக்கில் காணி உறுதிப்பத்திரங்களை அழித்து புலி குடும்பங்களுக்கு கணி வழங்கப்பட்டது:-

 

தமிழீழ அரசாங்கத்தின் தமிழக பிரதிநிதிகள் 5 பேர், திராவிட முன்னேற்றக்கழகத்துடன் - இந்திய இலங்கை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்:-திவயினவின் கண்டுபிடிப்பில் சில -

வடக்கில் காணி உறுதிப்பத்திரங்களை அழித்து புலி குடும்பங்களுக்கு கணி வழங்கப்பட்டது:-

 

 

வடக்கில் காணி கச்சேரிகளில் இருந்த காணி உறுதிப்பத்திரங்களை அழித்து விட்டு, போலி காணி உறுதிகள் மூலம் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் உயிரிழந்த புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு பல காணிகள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அழிக்கப்பட்ட காணி உறுதிகளில் அதிகளவானவை வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமானவை என  கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைதியாக இருந்து வருவதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காணி கச்சேரியில், இருந்த காணி உறுதிகள் அழிக்கப்பட்டு, போலி காணி உறுதிப்பத்திரங்கள் தயாரிக்கப்பட்டமை குறித்து, அங்கு பணியாற்றி தமிழ் அதிகாரிகள் அரசாங்கத்திற்கு அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழீழ அரசாங்கத்தின்   தமிழக பிரதிநிதிகள் 5 பேர், திராவிட முன்னேற்றக்கழகத்துடன் இந்திய இலங்கை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்:-

தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பின் தமிழக பிரதிநிதிகள் 5 பேர், திராவிட முன்னேற்றக்கழகத்துடன் இணைந்து செயற்படுவதால்,  இந்தியாவுக்கு மாத்திரமல்லாது இலங்கையின் தேசியப்பாதுகாப்புக்கும் பிரச்சினையாக உள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் கேர்ணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

2012 ஏப்ரல் மாதம் முதல் ஈழ அரசாங்கம் என்ற அமைப்பு தமிழகத்தில் செயற்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தமிழகத்தில் தனது அதிகாரத்தை முன்னெடுத்துச் செல்ல முயற்சிப்பதாகவும் ஹரிஹரன் மேலும் கூறியுள்ளார். 

 

 

அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.