தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார நடவடிக்கைகள் குறித்து பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக கையக்கடத் தொலைபேசி மற்றும் மெமரி கார்ட்களின் ஊடாகஇந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர்தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் கையடக்கத்n;தாலைபேசிகளின் புதிதாக பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில்முன்னாள் புலி உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்தத் தகவல்கள்கண்டறியப்பட்டுள்ளன.
சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலேயே வவுனியாசிறையில் குழப்பம் விளைவிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் இலங்கைக்குவிஜயம் செய்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் வவுனியா சிறைச்சாலைவன்முறைகள் திட்டமிடப்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அண்மையில் மூதூர் பிரதேசத்தில் புலிகளின் பிரச்சார வீடியோகாட்சிகளை கையடக்கத் n;தாலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்த இருவரை புலனாய்வுப்பிரிவினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.