விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

சந்திரிக்காவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்யரணில் முயற்சி?

 

சந்திரிக்காவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்யரணில் முயற்சி?

 

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவை போட்டியிடச் செய்ய எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் இணைந்து இந்தத்திட்டத்தை தீட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் லால்பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ரகசிய திட்டம் பற்றிய ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத்தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு ரணில்விக்ரமசிங்கவின் விசுவாசிகளைக் கொண்டதாகவும், அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும்நோக்கில் ரணில் இவ்வாறான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.