விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

ஞாயிறு பத்திரிகையொன்றின் ஆசிரியர் என்னைஅச்சுறுத்தினார் – கோதபாய

 

ஞாயிறு பத்திரிகையொன்றின் ஆசிரியர் என்னைஅச்சுறுத்தினார் – கோதபாய

 

ஞாயிறு பத்திரிகையொன்றின் ஆசிரியர் தம்மை அச்சுறுத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
எதிர்காலத்தில் உங்களுக்கு இதனையெல்லாம் செய்வோம் என கூறுவதானது மிரட்டலுக்கு நிகரானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
குறித்த ஞாயிறு பத்திரிகையின் ஆசிரியர் தமக்கு இவ்வாறான மிரட்டலை விடுத்ததாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
 
'நீங்கள் இதனைச் செய்துள்ளீர்கள், எங்களிடம் இது உள்ளது, இதனால் நாம் உங்களுக்கு இதனைச் செய்வோம்' என்று கூறுவதனை ஊடகதர்மமாக கருத முடியாது எனவும், அதனை அச்சுறுத்தலாக மிரட்டலாகவே கருதப்பட வேண்டும் எனபாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
 
எந்தவொரு நபரும் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம்செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஊடகவியலாளர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்திதம்மை குறித்த பத்திரிகை ஆசிரியை அச்சுறுத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷதெரிவித்துள்ளார்.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.