ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் கருத்துமுரண்பாடு
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், 10 ஆசனங்களை கைப்பற்றினால், முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்வது தொடர்பாக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க எண்ணியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இம்முறை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமது கட்சி 12 இடங்களை கைப்பற்றும் என நம்புவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் கருத்துமுரண்பாடு
01:42
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்துமுரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்கீழ் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எடுத்தத்தீர்மானத்திற்கு சிலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கட்சியின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் ஆளும்கட்சியுடன் இணைந்து போட்டியிடும் தீர்மானம் அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, கூட்டத்தைவெளிநடப்புச் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மூன்றுமாகாணசபைகளுக்குமான தேர்தலிலும் போட்டியிடப் போவதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஆளும்கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு முஸ்லிம் தலைவர்கள், கட்சியிடம் கோரியிருந்தனர்.
எனினும், முஸ்லிம் காங்கிரஸின் சிலநிபந்தனைகளை ஜாதிக ஹெல உறுமய நிராகரிக்கும் எனத் தெரிவித்து ஜனாதிபதி அந்த நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, முஸ்லிம் கட்சிகள் தனியாக கூட்டமைப்புஒன்றை அமைத்து போட்டியிட வேணடுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தப் பின்னணியிலேயே கட்சித் தவைலர் ரவூப்ஹக்கீம் ஆளும் கட்சியின் கீழ் போட்டியிடத் தீர்மானித்துள்ளார்.
இதனால் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர்இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளிட்டுள்ளதாகத் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.