செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

துமிந்த தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்ய நேரிடும்

 

துமிந்த தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்ய நேரிடும்

 

 
 
 
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தொடர்பில்சிங்கப்பூர் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்ய நேரிடும் என ஹிருனிகா பிரேமசந்திரதெரிவித்துள்ளார்.
 
துமிந்த சில்வாவை துரித கதியில் நாடு திரும்பாவிட்டால், சிங்கப்பூர் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்ய நேரிடும் என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கொலைக் குற்றச் செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நாட்டில் வசித்து வருவதாகத் தெரிவித்து இந்த முறைப்பாடு செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
ஹிருனிகா, கடந்த ஒக்ரோபர் மாதம் இடம்பெற்றமுல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  உயிரிழந்தமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் புதல்வி என்பதுகுறிப்பிடத்தக்கது.
 
என்றாவது ஓர் நாள் துமிந்த நாடு திரும்ப வேண்டிஏற்படும் எனவும், வாழ்க்கை முழுவதும் அவரால் சிங்கப்பூரில் தங்கியிருக்க முடியாது எனவும்ஹிருனிகா தெரிவித்துள்ளார்.
 
சம்பவத்துடன் n;தாடர்புடைய 20 சந்தேக நபர்களில்16 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.