செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் வழிகாட்டலுக்கு அமைய இணையதளப் பதிவு குறித்த சட்டம் அமுல்படுத்தப்படும்

 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் வழிகாட்டலுக்கு அமைய இணையதளப் பதிவு குறித்த சட்டம் அமுல்படுத்தப்படும்

 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தன் வழிகாட்டல்களுக்கு அமைவாகவே இணையதளப் பதிவு குறித்த சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
 
இணைய தளங்களை பதிவு செய்தல் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் சட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இணைய பதிவு செய்தல் தொடர்பான புதிய சட்டங்கள் பற்றிய முழுமையானவிபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, செய்தி இணைய தளங்களை எவற்றை வகைப்படுத்துவது என்பதில் சர்ச்சை எழுந்துள்ளது.
 
இலங்கை தொடர்பான தகவல்களை வெளியிடும் பல இணைய தளங்கள் இயங்கிவருவதாகவும் அவற்றில் எவற்றையெல்லாம் செய்தி இணைய தளங்களாக வகையீடு செய்வது என்பது பற்றி இன்னமும் தீர்மனிக்கப்படவில்லை.
 
ஏனைய இணைய தளங்களையும், செய்தி இணைய தளங்களையும் வேறுபடுத்தி வகையீடு செய்வது சிரமமான விடயம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
செய்தி இணைய தளங்கள் பதிவிற்காக ஒரு லட்ச ரூபாவினையும்,பதிவினை வருடாந்தம் புதுப்பிக்க 50000 ரூபாவினையும் செலுத்த வேண்டுமென அரசாங்கம ;அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.