செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

வடக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதாக வெளியான புள்ளி விரபங்களில் உண்மையில்லை - இராணுவம்

 

வடக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதாக வெளியான புள்ளி விரபங்களில்  உண்மையில்லை - இராணுவம்

வடக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதாக வெளியான புள்ளி விரபங்களில்  உண்மையில்லை - இராணுவம்

வடக்கில் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் வெளியான புள்ளி விபரங்களில் உண்மையில்லை என இராணுவம் அறிவித்துள்ளது.

வடக்கில் ஒவ்வொரு ஐந்து பிரஜைகளுக்கும் ஒரு இராணுவப் படைவீரர் என்ற ரீதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நாட்டில் 200000 படைவீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

வடக்கில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் வாழ்ந்து வருவதாகவும், ஒவ்வொரு ஐந்து பொதுமக்களுக்கும் ஒரு இராணுவ வீரர் என்ற அடிப்படையில் படையினர் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டிருந்தால் ஒட்டு மொத்த இராணுவமும் வடக்கில் மட்டுமே கடமையாற்றியிருக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் 20000 இhணுவத்தினரும் காவல்துறையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவம், வான்படை, கடற்படை மற்றும் காவல்துறை ஆகியவற்றை சேர்த்தே 20000 பேருக்கு குறைவானவர்களே வடக்கில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

2007ம் ஆண்டில் உக்கிரமான யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் 50000 படைவீரர்கள் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டிருந்தாகக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு யுத்த வலயத்தில் பாரியளவில் படையினர் நிலைகொண்டிருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈராக் போன்ற யுத்தம் இடம்பெறும் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது. படைவீரர் பொதுமக்களுக்கு இடையிலான விகிதத்தில் இலங்கை முன்னணி வகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.