செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

அரசியல்வாதிகளின் உறவினர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர் – ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணி

 

அரசியல்வாதிகளின் உறவினர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர் – ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணி


 

அரசியல்வாதிகளின் உறவினர்கள் தேர்தலில் போட்டியிடுவதாக ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

ஆளும் கட்சியின் முன்னணி அரசியல்வாதிகளின் உறவினர்கள் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறிப்பாக அமைச்சர் ஒருவரின் கணவர், அமைச்சர்களின் புதல்வர்கள், பிரதி அமைச்சரின் புதல்வர் உள்ளிட்ட ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களது உறவினர்கள் தேர்தலில் போட்டியிடுவதாக ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசியலல்வாதிகளின் உறவினர்கள் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும், ஆறு அரசியல்வாதிகளின் நெருங்கிய உறவினர்கள் தேர்தலில் போட்டியிடுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

வடமத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபையில் அரசியல்வாதிகளின் உறவினர்கள் போட்டியிடவதாகவும் இவ்வாறு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் எனவும் ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் தினியாவெல பாலித தேரர் தெரிவித்துள்ளார்.

குடும்ப உறுப்பினர்கள் அதிகாரத்தையும், செல்வங்களையும் குவிக்கும் நோக்கில் இவ்வாறு ஆளும் கட்சியினர் உறவினர்களை தேர்தலில் களமிறக்குவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.