செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

படகுப் பயணிகளை நாடு கடத்த வேண்டும் திசர சமரசிங்க

 

படகுப் பயணிகளை நாடு கடத்த வேண்டும் திசர சமரசிங்க

 

 
 
 
படகுப் பயணிகளை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவுஸ்திரேலியாவிற்கானஇலங்கை உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் இலங்கைப் படகுப் பயணிகள் மீள அனுப்பிவைக்க்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
இவ்வாறு படகுப் பயணிகளை திருப்பி அனுப்புவதன் மூலம் புகலிடக் கோரிக்கையாளர்களின்சட்டவிரோத கடல் வழிப் பயணத்தை தடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
படகுகள் இலங்கையில் இருந்து புறப்படுவதனை தடுப்பதன் மூலம் புகலிடக்கோரிக்கையாளர்களின் பயணங்களை கட்டுப்படுத்த முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
அண்மையில் 109 பயணிகளுடன் அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்பட்ட படகினைகடற்படையினர் கைது செய்ததனைத் தொடர்ந்து, திசர சமரசிங்க இந்தக் கருத்தைவெளியிட்டுள்ளார்.
 
படகுப் பயணிகளை திருப்பு நாட்டுக்கு அழைத்துச் செல்லும் போது இலங்கைப் படையினர்அதிகாரத்தைப் பயன்படுத்துவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கைது செய்யப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தாங்களாகவே நாடு திரும்புவதாகக்குறிப்பிட்டுள்ளார்.
 
சட்ட ரீதியான வழிகளின் மூலம் அவுஸ்திரேலியா செல்ல இலங்கையர்கள் முயற்சிக்கவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
போதியளவு கல்வி தகமையோ அல்லது பணமோ இல்லாவிட்டால் அவுஸ்திரேலியாவில் குடியேறமுடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.