51 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் சரணடைந்துள்ளனர்.
படகு மூலம் சென்ற குறித்த இலங்கைப்புகலிடக் கோரிக்கையாளர்கள், அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகளை சென்றடைந்துள்ளனர்.
அண்மையில் அவுஸ்திரேலியாவை சென்றடைந்த ஏனைய படகுகளைப் போன்று அந்நாட்டுகடற்படையினரின் உதவியைப் பெற்றுக் கொள்ளாது, இந்தப் படகு நேரடியாக கிறிஸ்மஸ்தீவுகளை அடைந்துள்ளது.
கடந்த மாதம் அவுஸ்திரேலியா நோக்கி பயணம் செய்த இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானதில்94 பேர் உயிரிழந்தனர்.