செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

ஐ.தே.க 18 - 19ம் திகதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய தீர்மானம் :

 

ஐ.தே.க 18 - 19ம் திகதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய தீர்மானம் :

  

கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தலில் போட்டியிட உள்ள ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது. வேட்புமனுக்களில் வேட்பாளர்களின் கையெழுத்தை பெறும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டதுடன் நாளை மதியம் அந்த பணிகள் நிறைவு செய்யப்பட உள்ளன.
 
இதனடிப்படையில், 18 ஆம் திகதி வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதுடன் 19 ஆம் திகதி கிழக்கு மாகாணத்திற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 
 
கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அந்த மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தயா கமமே தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஏனைய இரண்டு மாகாணங்களுக்கான முதலமைச்சர் வேட்பாளர்கள் குறித்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் போது அறிவிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.