தேசிய மற்றும் சர்வதேச இணையத்தளங்களுக்கு சேறுப்பூசும் செய்திகளை வழங்கி வரும் ஊடகவியலாளர் ஒருவர் புலனாய்வு பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார் என கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டு, அவர்கள் மூலம் கிடைக்கும் தகவல்களை திரிபுப்படுத்தி, இ;நத நபர் இணையத்தளங்களுக்கு வழங்கி வந்துள்ளார்.
இந்த நபர், ஊடகத் தொழிலில் சம்பாதிக்க முடியாதளவில் பணத்தை சம்பாதித்துள்ளதாகவும் கொழும்பில் உள்ள ஆடம்பர தொடர்மாடி வீட்டில் வீடொன்றை கொள்வனவு செய்துள்ளதுடன் வாகனங்களையும் வைத்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளும் இந்த ஊடகவியலாளர், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை இலங்கைக்கு வரவழைத்து, அவர்களுக்கு தேவையான செய்திகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகளை செய்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக மாத்திரமல்லாது, முக்கிய பிரமுகர்கள், அரச அதிகாரிகள் உட்பட பல்வேறு நபர்களுக்கு எதிராக இவர் இணைத்தளங்களுக்கு சேறுப்பூசும் செய்திகளை வழங்கியுள்ளார் எனவும் அந்த ஊடகம் குறிப்பிட்டள்ளது.