விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

இணைப்பு 2 மு.காவின் தீர்மானத்தில் மாற்றம் இல்லை-கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டி

 

இணைப்பு 2 மு.காவின் தீர்மானத்தில் மாற்றம் இல்லை-கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டி

 

இணைப்பு 2 மு.காவின் தீர்மாணத்தில் மாற்றம் இல்லை - கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டி

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதென்று சிறீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே எடுத்திருந்த தீர்மானித்தில் மற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுடன் இணைந்து போட்டியிடுவதென்ற முஸ்லிம் காங்கிரசின் தீர்மானத்தால் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியே மக்கள் மத்தியிலும் மாற்றுக் கருத்துக்கள் எழுந்துள்ளதாக தவல்கள் வெளியாகிருந்தது.

இந் நிலையல், தாருஸ் ஸலாமில் இன்று நண்பகல் கூடிய சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக்குழு எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசிற்கு ஆதரவு வழங்க எடுத்த தீர்மானத்தை மீண்டும் அங்கிகரித்துள்ளது.

இதனபடிப்படையில் எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை அரசுடன் இணைந்து போட்டியிடவுள்ளது.

இதேவேளை கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசம் என்பதால் சிறீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடுவதால் நிச்சியம் வெற்றி பெரும் என்று எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடுவதென்ற தீர்மானம் குறித்து மீள் பரிசீலனை:-

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதென்று சிறீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே தீர்மானித்திருந்த போதிலும் அத்தீர்மானம் இன்று மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளது.

அரசுடன் இணைந்து போட்டியிடுவதென்ற மு.காவின் தீர்மானத்தால் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியே மக்கள் மத்தியிலும் எழுந்துள்ள எதிர்ப்பைத் தொடர்ந்தே மேற்படி தீர்மானம் மீள்பரி சீலனை செய்யப்படவுள்ளது என மு.கா. தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக கட்சியின் உயர்பீடம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் அதன் தலைமையகமான தாருஸ் ஸலாமில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலை மையில் கூடுகின்றது. 

அதற்கு முன்னதாக காலை 8 மணிக்கு கட்சியின் எம்.பிக்களை ஹக்கீம் சந்தித்துப் பேசவுள்ளார். அச்சந்திப்பில் எட்டப்படும் தீர்மானங்களை அடிப்படையாகக்கொண்டு முன்னைய தீர்மானம் மீள்பரிசீலிக்கப்படும் என கட்சித் தகவல்கள் தெரிவித்தன.

அரசுடன் இணைந்து போட்டியிடுவதென்று மு.கா. ஏற்கனவே தீர்மானம் எடுத்திருந்தது. இத்தீர்மானத்தால் கட்சியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியடைந்தனர். 

அதிருப்தி குழு தனித்துப் போட்டியிடுவது பற்றியும் கலந்தாலோசிக்கத் தொடங்கியது. கட்சியின் செயலாளர் எம்.ரி.ஹஸன் அலியும் அரசுடன் இணைந்து போட்டியிடும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 

மேற்படி தீர்மானத்தை எவரும் ஏற்காததால் அதை மீள்பரிசீலனை செய்யும் நிலைக்கு SLMC தலைமைத்துவம் தள்ளப்பட்டுள்ளது. இன்று காலை மீண்டும் கட்சியின் உயர்பீடம் கூடி தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யவுள்ளது.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.