இரத்தினபுரி கஹாவத்தையில் மற்றுமொரு இரட்டைக் கொலைச் சம்பவம்இடம்பெற்றுள்ளது. கஹாவத்தை பிரதேசத்தில் மற்றுமொரு தாயும் மகளும் சடலமாகமீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இருவரும் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீடு எவ்வாறு தீப்பற்றியது என்பது பற்றிய தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை. கஹாவத்தை கொடகதென்ன என்னும் பிரதேசத்தில் 63 வயதான தாயும்,32 வயதான மகளும் இவ்வாறு எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கஹாவத்தைப் பிரதேசத்தில் தாய்மற்றும் மகள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.