குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இனரீதியான போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும் மத ரீதியான போரை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை தீகவாபி விகாரையில் தங்க வேலியுடன் கூடி வெள்ளரச மர வழிப்பாட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முழு உலகமும் வணங்கி செல்லும் வகையில், இந்த புனித இடத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடமையாகும். இது குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் என நாம் எதிர்பார்கின்றோம். முக்கியமாக தீகவாபி போன்ற புனித ஸ்தலத்தை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு தரப்பினர் செய்த அர்ப்பணிப்புகளை மறக்கக் கூடாது. நாட்டில் போர் ஓய்ந்துள்ள போதிலும், மத போரை மேற்கொள்ள வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது எனவும் மாநாயக்க தேரர் கூறியுள்ளார்.