விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

வலுப்பெற்று வருகின்றது அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிரான சட்டத்தரணிகளின் ஆர்ப்பாட்டம்!.

 

 

மன்னார் நீதிபதியை தெலைப்பேசியில் மிரட்டிய அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிரான சட்டத்தரணிகளின் ஆர்ப்பாட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் நீதிமன்ற சூழலில் ஏற்படுத்தப்பட்ட கலவரம் மற்றும் நாசகார நடவடிக்கைகளை கண்டித்து நாட்டின் பலபாகங்களிலும் உள்ள நீதிமன்றங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டடிருக்கின்றன.

மன்னார் நகரின் பிரதான நுழைவாயிலில் அமைந்திருக்கும் நீதிமன்றத்தை அன்மித்த பகுதியில் நேற்று முன்தினம் (18.07.2012) உப்புக்குளம் பகுதியைச்சேர்ந்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியிருந்தது.

இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த கலகம் அடக்கும் பொலிஸார் மீது கலகக்காரர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டதோடு நீதி மன்றங்களின் மீதும் கல்வீச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலகம் அடுக்கும் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தடியடிப்பிரயோகங்களை மேற்கொண்டு நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்ததோடு மன்னார் நீதிமன்றம், நகர்பகுதிகளை இராணுவத்தின் உதவியோடு தமது பூரண கட்டுப்பாட்டினுள்ளும் கொண்டுவந்திருந்தனர்.

அதேவேளை மன்னார் மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் அ. யூட்சன் அவர்களது வதிவிடத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு நன்கு திட்டமிடப்பட்டு மேற்கோள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏவலாளிகள், சூத்திரதாரிகள், தாக்குதல்களை மேற்கொண்ட நபர்களை கைது செய்யும் பொருட்டும் விசேட பொலிஸ் குழுக்கலும், தடயவியல் பொலிஸாரும் மன்னார் நகரிற்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம், நீதிமன்ற அவமதிப்பு, நீதவான் மீதான தூசிப்புக்கள் என்பவற்றிற்கு எதிராக மன்னார் சட்டத்தரணிகள், நீதிமன்ற பணியாளர்களினால் கண்டனம் தெரிவித்தும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இடம்பெற்றிருக்கின்றது.

அதேவேளை நேற்;றைய தினம் மன்னார் நீதிமன்றத்தின் முன் இடம்பெற்றிருக்கும் பணிப்பகிஷ்கரிப்பில் நீதிமன்ற விவகாரங்களில் அரசியல் வாதிகளினதும், அரசியலினதும் தலையீடுகள்; என்பனவற்றை கண்டித்தும்;; கோஷங்கள். எழுப்பப்பட்டிருக்கின்றது.

இதேவேளை மன்னாரில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் குறித்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல பாகங்களிலுமுள்ள நீதிமன்றங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் குதித்திருக்கின்றன.

நாட்டின் வட பகுதியான வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்மாவட்ட நீதிமன்றங்கள் முழுமையாக செயலிழந்திருப்;பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதேவேளை கிழக்கு மாகாணத்தின் நீதிமன்றங்களும், சிங்கள பகுதிகளிலில் உள்ள நீதிமன்றங்களும் தமது நீதிமன்ற நடவடிக்கைகளை இடை நிறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே மன்னாரில் சட்டத்தரணிகளால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் பணிப்பகிஷ்கரிப்பிற்கு வலுச்சேர்க்கும் முகமாக வவுனியாவில் இருந்து சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலமையிலான சுமார் பத்திற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் நேரடியாக சமூகமளித்திருக்கின்றனர்.

இவர்கள் மன்னார் மேல்நீதிமன்ற நீதிபதி  மதிப்பிற்குரிய தியாகேந்திரன், மாவட்ட நீதிபதி மதிப்பிற்குரிய அ.யூட்சன் மற்றம் சட்டத்தரணிகள் ஆகியோரை நேரில் சந்தித்து தமது கவலையை தெரிவித்திருக்கின்றனர்.

மன்னாரில் நேற்றைய தினம் சுலோகங்கள் ஏந்தி இடம்பெற்றிருக்கும் சட்டத்தரணிகளின் ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் றிஷாட் பதியூதினுக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றது.

சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான், வேண்டாம் உன் அரசியல் அராஜகம்.

றிஷாட்! நீதிமின்ற கட்டளைக்கு கட்டுப்பட உன் காடையர்க்கு சொல்,

அமைச்சர் நீதிபதியா? அரசேதீர்ப்பு வழங்கு

மக்களை பிழையாக வழிநடத்தாதீர் நீதியையும், அரசியலையும் கலக்காதீர் ஒழிக உன் அரசியல்  அராஜகம்

அமைச்சரே! நீதிமன்ற தீர்ப்பில் தலையிடாதே!

அமைச்சரே! ஆண்டவன் வேறு நீவேறு

அமைச்சரே நீதித்துறையை சுதந்திரமாக செயற்படவிடு

நீதிமன்றத்திற்கு எதிராக உன் காடையரை ஏவிவிடாதே

நீதித்துறை சுதந்திரமானது, கௌரவ நீதிபதியை அவமதிக்காதே, தீர்ப்பை அவமதியாதே!

போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை தாங்கியவர்களாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பியிருக்கின்றனர்.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(14) அபிப்பிராயங்கள்
20-07-2012, 18:26
 - Posted by Solomon
அற்பனுக்கு புவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம். கர்வம் தலைக்கேறினால் தந்தலைக்கே கேடாம். பதியுதீன் ரெம்ப ஆடதியுங்கோ நல்லதுக்கு இல்லை. அடக்கி வாசியுங்கோ !.
20-07-2012, 19:05
 - Posted by Siva.
Well said , Solomon ! I agree with you! But, I think that it is too late to correct himself!
20-07-2012, 19:31
 - Posted by Anonymous
இன்று இந்த பிரச்சனையை முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சனையாக திசை திருப்ப முஸ்லிம் தலைமைகள் முயன்று வருகின்றன ..வியாபாரி ரிச்சர்ட் எப்படி இந்த மக்களை தவறாக வழி நடத்த முற்படுகின்றரோ அதே போல கடந்த காலங்களில் முஸ்லிம் தலைமைகள் சின்ஹல அரசோடு சேர்த்து தமிழ் முஸ்லிம் பிரச்சனைகளை ஏற்படுத்தினார்கள் ....
20-07-2012, 20:34
 - Posted by Solomon
// அதே போல கடந்த காலங்களில் முஸ்லிம் தலைமைகள் சின்ஹல அரசோடு சேர்த்து தமிழ் முஸ்லிம் பிரச்சனைகளை ஏற்படுத்தினார்கள் ....// அப்ப தமிழ் தலைவர்களும் , முப்பது ஆண்டுகள் (நாடு சுதந்திரம் அடைத்த ஆண்டுகளில் அரைவாசி ) புலிகளாலும் எந்த நல்ல வழி காடினார்களோ ?. இரண்டு மத இனங்களுக்கு இடையில் இலங்கை முஸ்லிம்கள் மென்பட்டு வாழ்வது ஒன்றும் சுலோபமானது இல்லை !.
20-07-2012, 23:54
 - Posted by Irem
சொலொமன் உங்கள் கருத்துக்களைப் படிக்கும் போது உங்களுக்குள் இருக்கும் துவேஷம் எவ்வளவு வெளிப்படையாகத் தெரிகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு கணினி கையில் கிடைத்தவுடன் வடிவேலு மாதிரி வாய்க்கு வந்ததையெல்லாம் எழுதாமல் கொஞ்சம் மூளையைக் கசக்கி புதிதாக ஏதாவது எழுதப் பாருங்கள். இந்த மூட்டைப் பூச்சித் தொல்லை தாங்க முடியலைப்பா !! ஒரே கடி!!
21-07-2012, 02:10
 - Posted by Anonymous
இன்றைய பிற்போக்கு முஸ்லிம் அரசியல் விஜபரிகள் போல கடந்த முப்பது ஆண்டுகளில் சின்ஹல அரச பயங்கரவாதிகளோடு சேர்ந்து தமிழர்களை கொலை செய்தல் ,கோவில்களை அழித்தல்,கற்பழிப்பு ,கடத்தல் ,மதமாற்றம் ,கிராமங்களை அழித்தல் என முஸ்லிம் குழுக்கள் செய்த அடாவடிகள் அளவில்லாதவை ..பதிலாக புலிகள் ஆயுத வழியில் அல்லது மற்றய தமிழ் தலிமைகள் மத தலைவர்கள் நேர்மையாக பதில் நடவடிக்கை எடுத்தல் சின்ஹல அரச குளுகளோடு சேர்ந்து இனவாதம் பேசி இரு சமுக உறவை கெடுப்பதில் முன்னணி வகிகிரர்கள் ........இன்றைய சம்பவங்கள் இரு சமுக உறவு கெடுவதற்கு யார் கரணம் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது
21-07-2012, 07:18
 - Posted by Solomon
காயத்ரி ,
என் கருத்தில் மட்டும் என் உங்களுக்கு துவேசம் தெரிகிறது. நான் ஒரு முஸ்லிம் என்பதாலா?. என் கருத்துக்கு முன் ஒரு 'அநோமததய' நண்பர் முஸ்லிம் தலைவர்களால் தான் ஏதோ தமிழ் பேசும் முஸ்லிம் - தமிழ் பேசும் ஹிந்து (முஸ்லிம்களும் தமிழர்கள் தான் ) இனத்துக்கு இடையான பிளவு ஏற்படாது போல் எழுதி இருபது அபாண்ட பொய்யுடன் கூடிய துவேசமாக தெரியவில்லையாக ?. குறிப்பாக வடக்கு அரசியல் வாதிகள் (நீங்கள் கூறும் துவேசத்தை அடிப்படை கொள்கையாக கொண்ட ) தமிழ் பேசும் முஸ்லிம் களுக்கு ஆதி துவக்கம் ஆப்பு வைத்த சரித்திரத்தை குளோபல் தமிழ் செய்தி தளத்தில் வந்த
"கால சுவடுகள்" அருமையான கடுரையையும் ஒளி பதிவையும் பார்த்து ரத்த கண்ணீர் வடியுங்கள். இலங்கை சுதந்திரம் அடைந்து முதல் முப்பது வருசங்களும் "தமிழ்" அரசியல் வாதிகள் முஸ்லிம்களை ஒதுக்கி , மலையாக தமிழர்களின் பிரஜா உரிமை பறிபோக ஒத்தாசை செய்து தங்கள் அரசியல் நடத்தினார்கள். அடுத்த முப்பது ஆண்டுகளும் ஆயுத குழுவான புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்த கொடுமைகள் சொல்லி மாளாது.
இவைகளை சொன்னால் துவேசமா ?

Did you read what I wrote as my first comment ?.
அதுவும் துவேசமா ?. மூளையைக் கசக்கி புதிதாக ஏதாவது எழுதப் பாருங்கள். இந்த மூட்டைப் பூச்சித் தொல்லை தாங்க முடியலைப்பா !! ஒரே கடி!!

காயத்ரி "காயத்ரி மந்திரம்" சொல்லுங்கள் .மனம் தெளிவாகி தொல்லைகள் விட்டுப்போகும்
21-07-2012, 09:12
 - Posted by Anonymous
நான் எந்த இடத்திலும் இன துவேசம் பேச வில்லை ..மாறாக சின்ஹல அரசியல் வாதிகளின் நிகழ்ச்சி நிரலில் முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் எந்த அளவு தூரம் கடந்த காலத்தில் இருந்து சமுக முரண்பாடுகளை துண்டி வருகிறார்கள் என்பதையும் அப்பாவி முஸ்லிம் மக்களை எமாற்றி வருகிறார்கள் என்பதையும் சொன்னேன் ..இங்கே யாரும் தமிழ் தலைவர்கள் செய்தது எல்லாம் சரி என்று சொல்லவில்லை ....மாறாக முஸ்லிம் குழுக்கள் சின்ஹல அரசோடு சேர்ந்து கோவில்களில் நடத்திய கொலைகளும் ,கற்பழிப்புகளும் ,காணி பறிப்புகளும் ,கிராம அழிப்புகளும் தான் முஸ்லிம் தமிழ் பிரச்சனிக்கு அடிப்படை காரணம் என்பதை மறுக்க முடியுமா ?????..வடக்கில் நடந்த காடிகொடுப்புகள் (பொம்மை வெளியில் பதினோரு போராளிகள் கொலை ,ஜெமில் மாஸ்டர் குழுக்களின் துரோக கட்டிகொடுப்பு உட்பட பல சம்பவங்கள் ) எல்லாம் தான் புலிகள் முஸ்லிம்கள் மீதான மோசமான நடவைக்கைக்கு காரணம்..ஆனால் இவருக்கெல்லாம் புலிகள் உட்பட தமிழா தரப்பில் வருத்தங்கள் சொல்லபடிருகின்றன..ஆனால் இன்று வரை இவருக்கு காரணமான முஸ்லிம் குழுக்களின் அடவடிகளுக்கு எந்த தரப்பும் மன்னிப்பு கோர வில்லை ..மறுதலையாக இன்று வரை தன்கள் சுய நன்மைக்காக இரு சமுகங்களயும் மோத விடுவது யார் /////// நீங்கள் சொன்ன அதே காலசுவடு பத்திரிகை தெளிவாக முஸ்லிம் குழுக்கள் எவ்வாறு தமிழ் முஸ்லிம் பிரச்சனையை கொண்டு வந்தார்கள் என எழுதி இருக்கிறது >>>>>>இன்று மன்னாரில் ஏற்பட்ட பிரச்னையை சமுக பிரச்சனையாக ஏற்படுத்துவது யார் ..இது தான் கடந்த காலங்களிலும் நடந்தது ......முஸ்லிம் இன மக்களை நாங்கள் நேசிக்கிறோம் ..எங்களின் அதே பிரச்சனைகள் அவர்களுக்கு இருக்கிறது ..ஆனால் இந்த முஸ்லிம் குழுக்கள் ,சுய லாப அரசியல் குழுக்கள் போன்றவற்றை தெளிவாக வருகிறோம் .......புலிகள் உட்பட தமிழர் தரப்பில் தவறுகள் இருந்தாலும் ,இந்த பிரச்சனயை தோறு வித்தவர்கள் முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் தான் .....இன்று வரை அது தொடர்கிறது ..புலிகள் இல்லாத நிலையில் இன்று மத தலைவர்கள் மீதும் தமிழ் அரசியல் சமுக தலைவர்கள் மீதும் குற்றம் சாட்டி தங்கள் அசிங்கங்களை செய்கிறார்கள் ........
21-07-2012, 09:27
 - Posted by Anonymous
சொலமன் உங்கள் கருத்துக்களில் இனவாதம் உள்ளது.
ஹக்கீமின் முடிவுக்கு முதலில் ஆதரவுக்கொடி தூக்கினீர். அதாவது அரசுடன் சேர்ந்தால்தான் நன்மை என்று.
இப்போது பார்த்தீரா, ஹக்கீமை. தனித்து போட்டியாம். உங்கள் கருத்துக்கள் தமிழர்களையும், தமிழ் அரசியல்வாதிகளையும் சாடுவதாக உள்ளதே தவிர, முஸ்லிம் சமூகத்தின் சார்பில் எந்தக் கருத்தும் அமையவில்லை.

கொழும்பு மாநகர எதிர்க்கட்சித் தலைவர் முஸம்மில் கூறும் கருத்தைக் கேட்டீர்களா http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/80489/language/ta-IN/article.aspx பாருங்கள் தெரியும். அரசு முஸ்லிம் சமூகத்திற்கு செய்த செயற்பாடுகள் புரியும்.

உங்களைப் போன்று தமிழ் அரசியல் தலைமைகளைக் குறை சொல்பவர்களுக்கு வேறு என்ன வேலை.
21-07-2012, 09:41
 - Posted by Anonymous
"//Did you read what I wrote as my first comment ?.
அதுவும் துவேசமா ?. மூளையைக் கசக்கி புதிதாக ஏதாவது எழுதப் பாருங்கள். இந்த மூட்டைப் பூச்சித் தொல்லை தாங்க முடியலைப்பா !! ஒரே கடி!!//"

சொலமன் ரிஷாத்துடன் உங்களுக்கு என்ன கோபம். அவர் நீங்கள் கூறும் ஏனைய தமிழ் அரசியல் வாதிகள் போல அல்ல. அவர் முஸ்லிம் சமூகத்திற்காகவே பணி புரிந்து வருகிறார். அவரை உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் போலும் அவரைக் கடிந்து எழுதியுள்ளீர்கள்.

முதலில் உங்கள் துவேசத்தைக் கைவிட்டு கருத்துக்களை மட்டும் பதிவு செய்யப் பாருங்கள்
21-07-2012, 11:11
 - Posted by Irem
சொலமன், வரிக்கு வரி இனவாதம் பேசும் உங்களது பெயர் கூட இரவல் தான். தமிழ் அரசியல்வாதிகளையும், தமிழர்களையும் கொச்சைப்படுத்தி, இழிவாக விளித்து கருத்து வெளியிடுவது போதாமல், பாதம் கழுவி நடத்தும் பிழைப்பை உலக மகா சாதனையாக சித்தரிக்கிறீர்கள். கடந்த கால நிகழ்வுகள் தொடர்பான எந்த விதமான பக்கச் சார்பற்ற அறிவு இல்லாமல் நானும் இருக்கிறேன் என்ற ரீதியில் திரும்பத் திரும்ப ஒரே விடயத்தை எழுதுகிறீர்கள்.ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்வதால் உண்மையாகிவிடாது. தமிழர்களுக்காக இவ்வளவு முதலைக் கண்ணீர் விடும் நீங்கள் நேற்று முன்தினம் Al Jazeera தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிய அமைச்சர் ரவுப் ஹக்கீமின் பேட்டியை இணையத்தில் தேடித் பிடித்துப் பாருங்கள்.
21-07-2012, 17:26
 - Posted by Solomon
அட கொக்கா மக்கா !. நாங்கள் எங்கள் முஸ்லிம் சகோதரர் செய்யும் தவறுகளை கண்டித்தாலும் அது "இனவாதம்," முஸ்லிம் காங்கிரசும் சின்ஹல பெரும்பான்மை கட்சியும் ஒன்றாக இன ஒட்ட்ருமையுடன் தேறுதலில் போட்டி இடுவதை ஆதரித்தாலும் "இனவாதம்"..அப்ப கொலை தவிர வேறு எதுவுமே செய்யாத புலிகளை "அஹா ஓகோ " என்று கண்ணை மூடிக்கொண்டு புகழ்ந்தால் இன ஒற்றுமையை பேசுபவனாக கருதுவீர்களா?. அறிவு கொழுந்துகள்.!

//நீங்கள் சொன்ன அதே காலசுவடு பத்திரிகை // ..கண்ணா !, நான் சொன்னது GTN இல் வெளிவந்த "கால சுவடுகள் ". நீங்கள் கூறுவது புலிகளின் ஊதுகுழல் கால சுவடு ...!. முடிந்தால் திரு குருபரன் அவர்கள் மீண்டும் அந்த காலப் பதிவை மீள கொண்டுவந்தால் நம்ம குழந்தைகளுக்கு அறிவு ஊட்டுவதாக அமையும் என்று நம்புகின்றேன்.

ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் கிழக்கில் தமிழ் பேசும் ஹிந்துக்களும் , தமிழ் பேசும் முஸ்லிம்களும் , தமிழ் பேசும் கிறித்தவர்களும் (ஒட்டு மொத்தமாக "தமிழர்கள்" என்று சொன்னால் உங்களுக்கு புரிவதில்லை) இப்போது அமைதியாகவே சகோதரத்துவத்துடன் வாழ்கிறார்கள். வடக்கில் "தமிழ்" அரசியல் வாதிகள் தங்கள் கட்சியை முன்னிலைப்படுத்த காட்டும் கூத்துகள் போல் கிழக்கில் இல்லை என்பதை வரும் செய்திகளில் இருந்து தெரிந்திருக்கும். இப்போது TNA காலடி வைதிருகிர்ரர்கள். யாழ்பாணத்து தலைகள் "இனவாதத்தை" கிழக்கிலும் கொட்டி சுய லாபம் தேடுபார்கள் என்பது நடக்கபோகும் இன ரீதியான தொல்லைகளுக்கு அத்திவாரமாக அமையும்.

"காணி அபகரிப்பு " , முன்னாள் போராளி நிமலரூபனின் கொலை, மீள் குடியட்ற்றம் என்பது மட்டும் கூறிக்கொண்டு எவ்வளவு நாள் அரசியல் செய்ய போகிறர்கள் என்று பார்ப்போம் .
22-07-2012, 02:26
 - Posted by Anonymous
இனவாதம் என்றால் என்னென்று தெரியாமல் வாசிக்கும் கேட்க்கும் அறிவு அற்று வெறும் புலி பூசாண்டி பேசும் உங்களுக்கு இருக்கும் அறிவு எங்களுக்கு இல்லை தான்.....
கால்சுவடு பத்திரிகை இந்தியாவில் இருந்து வெளியாக்கும் புலி எதிர்ப்பு பத்திரிகை ..இருந்தாலும் அந்த பத்திரிகை கூட முஸ்லிம் குழுக்கள் எப்படி சின்ஹல அரசோடு சேர்ந்து எப்படி முரணி பாடுகளை தோறுவித்தர்கள் என தெளிவாக சொலி இருக்கிறது .....இந்த பத்திரிகை சொன்ன சம்பவங்கள் அதனையும் கிழக்கில் வாழும் எல்லோருக்கும் தெரியும் ...காணி அபகரிப்பு ,கோவில்கள் மீதான தாக்குதல் ,கொலை ,கற்பழிப்பு ,கிராமங்கள் அழிப்பு ,கடத்தல் ,காட்டி கொடுத்தல் ,மத மாற்றம் என தொடுரும் கொடுமைகள் எல்லோருக்கும் தெரியும் ....உண்மையை எழுதும் பத்திரிகைகளை புலி ஊடகம் என நீங்கள் சொல்லுவது சின்ஹல அரசின் இனவாத பிரசாரத்தின் மறு வாசிப்பு ..இந்த சம்பவங்கள் எதயாவது .மறுக்க முடியுமா
புலிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் தான் .....ஆனால் அதற்க்கு காரணம் இந்த கொடூர முஸ்லிம் குழுக்களும் சின்ஹல அரசும் ..இன்று புலிகள் இல்லை ..என்ன நடக்கிறது ..இந்த முஸ்லிம் குழுக்கள் தன்கள் கோமாளி அரசியல் வியாபாரத்திற்கு தமிழ் மத தலைவர்கள் சமுக தலைவர்களை காரணம் சொல்லி சமுக பிரச்சனைஜை ஏற்படுத்துகிறார்கள் ..அன்று நடந்ததுகளின் தொடர்ச்சி ....கடந்த மூன்று ஆண்டுகளில் காணமல் போன நூர்கனக்கான மக்கள் எங்கே போனார்கள்
கிழக்கில் ஒன்றும் நடக்கவில்லை என கண்ணை மூடி கொண்டி பூனை கதை சொன்னால் மக்கள் முட்டாள்கள் இல்லை ...தமிழர்களை விடுங்கள் ..முஸ்லிம் மக்கள் கடந்த கிழமை bbc யில் சொன்ன காணி அபகரிப்பு ,வீடு திட்ட பிரச்சனை ,கடத்தல்கள் ,ஆயுத குழுக்கள் மோதல்கள் ,கற்பழிப்பு ....எல்லாம் சகோரத்துவம????/ என்ன அறிவு உங்களுக்கு ......கூட்டமைப்பு கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியாக அங்கு தேர்தலில் வென்று வருகிறது ....நீங்கள் உங்கள் கோமாளித்தனமாக கூடைமைப்பு புதிதாக வருகிறதாக கதை விடுகிரிர்கள் ....

முஸ்லிம்கள் தனி இனம் ..இஸ்லாம் மதத்தை வலி படுகின்ற பாரம்பரியமான இனம் ..உங்கள் கோமாளி கூத்துகளுக்கு ஆக இதையே ஏற்று கொள்ளாத நீங்கள் அரசியல் பேசுவது வெட்கம் ..புதிதாக மதவாதம் வேறு .....
22-07-2012, 09:50
 - Posted by Nimmi
இப்பொது இல்ல சொலமன் சாச்சாவுக்கு எப்போதுமே ஒரு வியாதி இருக்கு. எது நடந்தாலும் அதே உளறல். இவர் பேச்சில் அடிகடி வரும் வார்த்தைகள், "புலி" "பள்ளிவாசல் கொலை".

மறந்தும் தாம் காட்டிக் கொடுத்ததால் வாங்கிக் கட்டிக் கொள்ள நேர்ந்தது என்பதை சொல்வதில்லை. கவனமாக பேசுகிறாராம்.

சிங்களவர்களும் தமிழர்களும் நன்றாகவே வாழ்ந்திருப்பார்கள் இவர்கள் போன்ற காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்தும் ஜென்மங்கள் இல்லாதிருந்தால். "மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டிக் கொண்டு" தமிழர்கள் என்கிறார்கள்.

தமிழ் நாட்டு முஸ்லிம்களை போல இவர்களுக்கு என்றுமே தமிழ் உணர்வு இருந்ததில்லை. அவர்கள் தாம் தமிழர் என்று தான் சொல்வார்கள். மதம் என்கின்ற போது தான் "முஸ்லிம்" என்பார்கள். அவர்களின் தமிழ் கூட அவ்வளவு அழகாக இருக்கும். இவர்கள் தமிழை அப்படியே கடித்து துப்புவார்கள். மொழிக்கே அவ்வளவு தான் மதிப்பு. அப்புறம் எப்படி இனப் பற்று வரும்?

மதம் வேறு மொழி வேறு என்பது இவர்களுக்கு புரியவே இல்லை. கடைசியில் தமிழனாகவும் இல்லை. சிங்களவனாகவும் இல்லை. இதன் பின் விளைவு என்ன என்பது இந்த அறிவாளிகளுக்கு இன்னும் புரியவில்லை. திருந்தாத ஜென்மங்கள்.
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.