செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

வவுனியா - கொழும்பு தனியார் பேரூந்துகள் மீது மூன்றாவது நாளாக கல்வீச்சு :

 

வவுனியா -  கொழும்பு  தனியார் பேரூந்துகள் மீது  மூன்றாவது நாளாக கல்வீச்சு :


வவுனியாவிலிருந்து கொழும்பு  நோக்கிப் பயணிக்கும் தனியார் பேரூந்துகள் மீது  மூன்றாவது நாளாக இன்று சனிக்கிழமை அதிகாலையும் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.15 மணியளவில் வவுனியாவிலிருந்து கொழும்பு சென்ற பஸ்கள் மீது ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து கற்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து இவ்வாறு தாக்குதல் நடாத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்தனர்.  இத் தாக்குதலில் பயணிகளுக்கோ, சாரதி மற்றும் நடத்துனருக்கோ எவ்விதமான எவருக்கும் காயங்களும் ஏற்படவில்லை எனவும் பேரூந்துகளுக்கே சேதம் எற்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.