இலங்கை பிரதான செய்திகள்

ஊடகவியலாளர் தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக அரசாங்கம் அறிவிப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


ஊடகவியலாளர் தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தன, அண்மையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற போராட்டம் ஒன்றின் போது பிராந்திய செய்தியாளா ஒருவரை தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை வெளியாகும் வரையில் காத்திருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.  கடற்படைத் தளபதி சீருடையில் இருக்கவில்லை எனவும் அவ்வாறான ஓர் நிலையில் தாக்குதல் நடத்தியமை பாரிய சர்ச்சைக்குரியது எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், விசாரணை அறிக்கை கிடைக்கும் வரையில் யார் குற்றவாளி என்பது பற்றிய ஊகங்களை வெளியிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடற்படைத் தளபதி ஊடகவியலாளரை தாக்கியதாக குற்றச்சாட்டு

Dec 12, 2016 @ 06:53

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
raveenthira-gunaratna
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவிந்திர விஜேகுணரட்ன,  ஊடகவியலாளரை தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  ஹம்பாந்தோட்டை துறைமுகப் பணியாளர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் போது சூரியவௌ பிரதேச பிராந்திய செய்தியாளர் ஒருவரை கடற்படைத் தளபதி தாக்கியதாக் குறிப்பிடப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஊடகவிலாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, கடற்படை தளபதி தாக்குதல் நடத்தவில்லை எனவும், ஊடகவியலாளரை தள்ளியதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். எனினும் கடற்படைத் தளபதி தாக்குவதனைப் போன்ற புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே காவல்துறை மா அதிபர் தொலைபேசி அழைப்பு ஒன்றிற்கு பதிலளித்த சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் கடற்படைத் தளபதியும் சிக்கலில் மாட்டியுள்ளமை அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியாக அமைந்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *