இலங்கை பிரதான செய்திகள்

வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் லஞ்சம் வழங்கியது – மஹிந்தானந்த


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வரவு  செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் லஞ்சம் வழங்கியதாக முன்னாள் அமைச்சரும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த  அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கடந்த வார இறுதியில் வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் லஞ்சமாக காசோலைகளை வழங்கியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்த நாளுக்கு முதல் நாளில் 500,000 ரூபா மற்றும் 200,000 ரூபா காசோலைகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *