இலங்கை பிரதான செய்திகள்

கட்டுக்கரையில் 50,000 மீன்குஞ்சுகள் வைப்பிலிடப்பட்டது

வடக்குமாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்திற்கு அமைவாக, ஏற்கனவே இந்த ஆண்டு 4,50,000 மீன்குஞ்சுகளும், 12,00,000 நன்னீர் இறால் குஞ்சுகளும் கட்டுக்கரைக்குளத்திற்கு அந்த குளத்தை அண்டிய நன்னீர் மீன்பிடி சங்கத்தின் வாழ்வாதாரத்திற்காக வைப்பிலிடப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து அவர்களை மேலும் ஊக்குவிக்கும் நோக்கோடு, வடமாகாண மீன்பிடி அமைச்சின் 2016ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து (PSDG) ரூபா ஒரு இலட்சம் பெறுமதியான 50,000 மீன்குஞ்சுகள் கொள்வனவு செய்யப்பட்டு கட்டுக்கரைக் குளத்தில்  50,000 மீன்குஞ்சுகளை வைப்பிலிடும் நிகழ்வு இன்று 16-12-2016 மாலை 2:30 மணியளவில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில்  மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரனும் இலங்கை தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மன்னார், வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி பா.நிருபராஜ், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மன்னார் வவுனியா மா வட்ட பிரதம பொறியியலாளர் எஸ்.ரகுநாதன்,  மன்னார் மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.மைக்கல் கொலின், கட்டுக்கரை நன்னீர் மீன்பிடிசங்கத்தின் தலைவர், குறித்தபகுதி கிராமமட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *