இலங்கை பிரதான செய்திகள்

ரதுபஸ்பல சம்பவத்தாலேயே நான் தோற்றேன் – மகிந்த ஆதங்கம் :

ரதுபஸ்பல சம்பவத்தாலேயே நான் தோற்றேன் என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கரந்தெனிய கொஸ்வதுமான சுதர்ஷனாராமய விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ரதுபஸ்வல குறித்து யார் பொறுப்பு கூற வேண்டும் என்று ஊடகங்கள் கேள்வி எழுப்புவதாக தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச அவ்வாறான சம்பவங்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய காரணத்தினால்தான் நான் தேர்தலில் தோல்வியடைந்தேன் என்றும் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

கரந்தெனிய கொஸ்வதுமான சுதர்ஷனாராமய விகாரையின் தேரர்கள் வசிப்பதற்கான இரண்டுமாடி கட்டிமொன்றை வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ  கலந்துக்கொண்டார்.

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

  • ரதுபஸ்பல சம்பவத்தாலேயே தான் தோற்றதாகக் கூறும் திரு. மஹிந்த ராஜபக்ஷ, திரு. மைத்திரிபால சிறிசேனவும், திரு. ரணில் விக்கிரமசிங்கவும், சிங்களப் பெரும்பான்மையினரை பகைத்துக் கொண்டு தமிழ் சிறுபான்மையினரை திருப்திப்படுத்த முனைகின்றனர், (ஆதாரம்: ஜேவிபி நியூஸ்,20/12/2016) என்றும் பச்சை இனவாதம் பேசுகின்றார்?

    இவரது உண்மையான நோக்கம்தான் என்ன? ரதுபஸ்பல சம்பவத்துக்கான பொறுப்பை ஏற்பதன் மூலம், தனக்கெதிரான முறைகேடான ஆட்சிக் குற்றச்சாட்டு, பல பில்லியன் ரூபாய்கள் ஊழல் மற்றும் திட்டமிட்ட இனவழிப்புக்கான குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபடலாமென நம்புகின்றாரா? மேலும், ரதுபஸ்பல சம்பவம்தான் இவரது தோல்விக்குக் காரணமென்பதை ஏற்க முடியாது? அது உண்மையானால், ஐனாதிபதிப் பதவிக்காகப் போட்டியிட்டுத் தோற்ற இவரால் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாதே?

    இலங்கையில் ஒன்பது மாகாண சபை ஆட்சிக் கட்டமைப்புக்கள் இருக்கின்றபோதும், அவற்றுள் இரண்டு மட்டுமே தமிழ் மக்களுக்கான மாகாண சபைகள் ஆகும்! நிலைமை இவ்வாறு இருக்கும் போது, இன்றைய ஆட்சியாளர்கள் எப்படிச் சிங்கள மக்களை பகைக்க முனைகின்றார்களென்று இவர் கூறுகின்றாரோ, அவருக்கே வெளிச்சம்? இவ்வளவு பேசும் இவரால், வடக்கு கிழக்குத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கான, ‘மாகாண சபை ஆட்சி’, முறையை இல்லாமல் செய்யும் படி கூற முடியுமா?

    ஆக, பச்சை இனவாதம் பேசுவதன் மூலம் சிங்கள மக்களைத் தன்வசப்படுத்த முடியுமென இவர் நம்புவது மட்டும் உண்மை! இவரது கடந்த கால வெற்றிகளுக்கும், இவரது ஆயுதமாக இனவாதமாகவே காணப்பட்டது! ஆக, அன்று சிண்டுகள் மூலம் இனவாதம் பேசியவர், இன்று வெளிப்படையாகப் பேசுகின்றார்! இது போன்றதொரு ஈனப் பிழைப்பு இவருக்கு ஏனோ தெரியவில்லை?