இந்தியா பிரதான செய்திகள்

ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பே பதன்கோட் விமானப்படை தள தாக்குதலை நடத்தியது:-


இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டது ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு என இந்திய தேசிய பாதுகாப்பு முகவர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் தாக்குதலினை மேற்கொண்ட 5 தீவிரவாதிகள் கொல்லப்படடிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்றைதினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த இந்திய தேசிய பாதுகாப்பு முகவர் அதில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் ஆசார் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *