பிரதான செய்திகள் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் -செயலாளரை உச்சநீதிமன்றம் பதவியிலிருந்து நீக்கியுள்ளது.

லோதா கமிட்டி பரிந்துரையை அமுல்படுத்தாமல் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய , இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் அனுராக் தாக்கூர் மற்றும் செயலாளர் அஜய் ஷிர்க் ஆகியோரை உச்சநீதிமன்றம் பதவியிலிருந்து நீக்கியுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில் 2016ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவை இவ்விரு அதிகாரிகளும், செயல்படுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனுராக் தாக்கூர் , ஐசிசிக்கு லோதா கமிட்டி பரிந்துரை குறித்து கடிதம் மூலம் தெரிவித்த புகாரை நீதிமன்ற விசாரணையின்போது மறுத்திருந்தார். எனவே பொய் தகவலை அளித்ததாக உச்சநீதிமன்றம் தாக்கூர் மீது குற்றம் சுமத்தியுள்ளதுடன் இதுகுறித்து; விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இம்மாதம் 19ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *