இலங்கை பிரதான செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக வழக்குத் தொடரப்படும் – பொதுபல சேனா

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஸவிற்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மஹிந்த, பொதுபல  சேனாவையும் அதன் பொதுச் செயலாளரையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நடவடிக்கைக்கு பொதுபல சேனா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை  This man  (இந்த ஆள்) என திட்டியதாக இயக்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் கருத்தினால் ஏற்பட்ட அவமரியாதைக்காக நட்டஈடு கோரி நிபந்தனைக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்படும் எனவும் அதற்கு பதிலளிக்கத் தவறினால் வழக்குத் தொடரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபல சேனா அமெரிக்க,நோர்வே நிதியைக் கொண்டு இயங்கி வருவதாகவும் அதற்கு அமைச்சர்களான ராஜித சேனாரட்ன மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் உதவி வழங்கி வருவதாகவும் மஹிந்த குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் மஹிந்தவின் சார்பில் பொதுபல சேனா குரல் கொடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *