இலங்கை பிரதான செய்திகள்

சீனா இலங்கையில் இராணுவ முகாம் ஒன்றை அமைக்கவில்லை – அரசாங்கம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சீனா இலங்கையில் இராணுவ முகாம் ஒன்றை அமைக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையில் இராணுவ முகாம் ஒன்றை அமைக்கும் நோக்கில் சீனா செயற்படவில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக சிலர் பொய்யான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி எந்தவொரு நாட்டினாலும் இவ்வாறு இராணுவ முகாம்களை அமைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினால் ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடு செய்யும் நோக்கில் ஒப்பந்த அடிப்படையில் இலங்கையும் சீனாவும் இணைந்து செயற்பட உள்ளதாகவும், முகாம்கள் அமைப்பது பற்றிய தகவல்கள் பொய்யானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *