இலங்கை பிரதான செய்திகள்

முக்கிய பாதாள உலகக் குழுத் தலைவர் சுட்டுக் கொலை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முக்கிய பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். ரத்தரன் என்றழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை முல்லேரிய களனிமுல்ல என்னும் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரத்தரன் மற்றுமொரு பாதாள உலகக் குழு உறுப்பினரான அங்கொட லொக்கா என்பவரின் நெருங்கிய சகா எனத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் உதாம்மிட்ட சமர என்ற பாதாள உலகக்குழு உறுப்பினர் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலைக்கு பழி தீர்த்துக் கொள்ளும் நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *