இலங்கை பிரதான செய்திகள்

போக்குவரத்து பிரச்சினைகளுக்கு விரைவில் முடிவுகள் எட்டப்படும் -வடக்கு போக்குவரத்து அமைச்சர்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சரின் மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் நேற்றயதினம் 05-01-2016  வியாழன் மாலை 3 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்கள், மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் ஆகியோருக்கான விசேட ஒன்றுகூடல் இடம்பெற்றது.

குறித்த ஒன்றுகூடலை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார், கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் போக்குவரத்து சம்பந்தமான பிரசினைகள் தொடர்பில் பேரூந்து உரிமையாளர்கள்  சிலரும், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சிலரும் அமைச்சருக்கு தமது பிரச்சினைகள் தொடர்பாக குறித்த சந்தர்ப்பத்தில் எடுத்துக்கூறினர்.

அதற்கு தற்போதுள்ள நிலைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அந்த வகையில் குறித்த சமகால பிரச்சினைகளுக்கு கலந்தாலோசித்து ஓர் தீர்க்கமான முடிவு எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *