இலங்கை பிரதான செய்திகள்

ஊடகச்சுதந்திரம், தராதரம் என்பன பற்றி மக்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் பெற்றுக் கொள்ளும் காலம் நீடிப்பு

ஊடகச்சுதந்திரம், தராதரம் என்பன பற்றி மக்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் பெற்றுக் கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.இன்றுடன் இது முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த கால எல்லை ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
உயர்தரத்திலான ஊடக கலாசாரத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஊடக சுதந்திரத்தையும், தராதரத்தையும் உறுதிப்படுத்துவது இதன் நோக்கமாகும். மதத் தலைவர்களின் கருத்துக்களும், யோசனைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.
கருத்துக்களையும், யோசனைகளையும் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். முகவரி பணிப்பாளர் நாயகம், அரசாங்க தகவல் திணைக்களம், இலக்கம் 163, பொல்ஹேன்கொட, நாரஹன்பிட்டிய என்பதாகும். 0112- 514 853 என்ற பக்ஸ் இலக்கத்திற்கும் கருத்துக்களையும், யோசனைகளையும் முன் வைக்கலாம். ranga@dgi.gov.lk  மின் அஞ்சல் மூலமாகவும் அனுப்பிவைக்கமுடியும்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *