இலங்கை பிரதான செய்திகள்

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் – ராம்தாஸ்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டொக்டர் எஸ்.ராம்தாஸ் கோரியுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த சர்வதேச பொறிமுறைமைக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

சர்வதேச யுத்த குற்றச் செயல் நீதிமன்றமொன்று அல்லது அதற்கு நிகரான ஓர் பொறிமுறைமையை ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச விசாரணைகளுக்கு  இலங்கை அரசாங்கம் அனுமதி அளிப்பதில்லை எனவும் இந்தப் பின்னிணியில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *