பிரதான செய்திகள் விளையாட்டு

அணியின் தேவை நீடிக்கும் வரையில் விளையாடுவேன் – யூனிஸ் கான்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அணியின் தேவை நீடிக்கும் வரையில் விளையாடுவேன் என பாகிஸ்தான் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். அணிக்கு தமது சேவை எவ்வளவு அவசியம் என்பதன்  அடிப்படையிலேயே தமது எதிர்காலம் நிர்ணயிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் பத்தாயிரம் ஓட்டங்களை நெருங்கி விட்டதாகவும் பாகிஸ்தானிய வீரர் ஒருவருக்கு  இது முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அணிக்கும் பாகிஸ்தான் கிரிக்கட் வாரியத்திற்கும் தாம் எவ்வளவு அவசியம் என்பதன் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தற்போது தமது உடல் நிலை சிறந்த முறையில் காணப்படுவதாகவும் விளையாடக்கூடிய நிலைமை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காது 175 ஓட்டங்களை யூனிஸ் பெற்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் 11 நாடுகளிலும் சதம் அடித்த ஒரேயொரு உலக வீரர் என்ற சாதனையையும் யூனிஸ் கான் படைத்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *