பிரதான செய்திகள் விளையாட்டு

கட்டார் ஓபன் போட்டித் தொடரில் நொவாக் டுஜொவிக் வெற்றி:-

கட்டார் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின்   இறுதிப் போட்டியில் பிரித்தானிய நட்சத்திர வீரர் அண்டி மரேவை வீழ்த்தி, நொவாக்டு ஜொவிக்வெற்றியீட்டியுள்ளார்.

உலக டென்னிஸ் தர வரிசையில் மரே முதலாம் நிலையயும், டுஜொவிக் இரண்டாம் இடத்தையும் வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சேர்பிய வீரர் டுஜொவிக் இறுதிப் போட்டியில் 6-3 5-7 6-4 என்ற செற் கணக்கில் அண்டி மரேவை வீழ்த்தியுள்ளார். இதன்படி, கட்டார் ஓபன் போட்டித் தொடரை அடுத்தடுத்து வென்ற வீரர் என்ற பெருமையை டுஜொவிக் பெற்றுக்கொண்டுள்ளார்.

இருவருக்கும் இடையிலான போட்டி இரண்டு மணித்தியாலங்கள் 54 நிமிடங்கள் நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஜனவரி மாதம் 16ம் திகதி அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடர் ஆரம்பமாகவுள்ளது, இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *