இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் கல்வி இராஜாங்க அமைச்சருடன் இணைகின்றது.

இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் கல்வி சார்பாக இயங்கி வரும் நடிகர் சூர்யாவின் தொண்டு நிறுவனமான அகரம் பவுண்டேஷனின் வருடாந்த ஒன்று கூடல் இந்தியா தமிழ் நாட்டில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு அமைப்பின் வேண்டுக்கோளுக்கு அமைய இலங்கை நாட்டின் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்; கலந்துக் கொண்டார்.

இதன் போது இந்த அமைப்பின் செயற்பாடுகள் இலங்கையில் கல்வி இராஜாங்க அமைச்சருடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக ஆராயபட்டது. இதன் பயனாக எதிர்வரும் காலங்களில் அகரம் பவுண்டேஷனின் கல்விசார்பான செயற்பாடுகள் இலங்கையில் முன்னெடுக்க உள்ளன. இது தொடபாக ஆராய்வதற்கு இந்தியாவில் இருந்து குழு ஒன்றும் இலங்கைக்கு வரவுள்ளது.

அகரம் பவுண்டேஷன் (Agaram Foundation 2006 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அரசு சார்பற்ற தொண்டு அமைப்பு ஆகும். தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பினற்கும் கொண்டுசேர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த அமைப்பு,  சமூகத் தீமைகளை நீக்குவதற்கு கல்வி ஒரு மிகச் சிறந்த ஆயுதம் என்ற உறுதியான நம்பிக்கையை கொண்டு அனைவருக்கும் கல்வி வழங்கும் பணியைச் செய்து வருகின்றது.

அகரம் பவுண்டேஷன் 25ம் தேதி- செப்டம்பர் மாதம்- 2006 இல் பிரபல திரைப்பட நடிகர் சூர்யா சிவகுமாரால் நிறுவப்பட்டது. 2010 இல் இந்த அமைப்பு வசதியற்ற மற்றும் திறன் கொண்ட 102 படித்த மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான நிதி உதவி வழங்கி தரமான கல்வி அளிப்பதற்காக துவக்கப்பட்டது. 2012இல் அகரம் பவுண்டேஷன் 500க்கும் மேற்பட்ட முதல் தலைமுறை கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு அளித்து அவர்களை நம் நாட்டின் பொறுப்பான குடிமக்களாக உருவாக்க அனைத்து அம்சங்களிலும் பயிற்சி அளிக்க தொடங்கியது. ஏற்கனவே சூர்யாவின் தந்தை- நடிகர் சிவகுமார் 1979 இல் நிறுவிய ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ மூலம் மேல்நிலை தேர்வுகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

25 ஆண்டுகளாக அவர் செய்து வந்த சேவையை இப்போழுது தனது புதல்வர்களான சூர்யா சிவகுமார் மற்றும் கார்த்தி சிவகுமார் மேற்கொண்டு வருகின்றனர். இதன்  நோக்கம் சமுதாயத்தின் பின் தங்கியுள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு தரமான கல்வியை அளிப்பதே முதன்மையான நோக்கமாகும். இதன் குறிக்கோள்கள் தேவையுள்ள கல்வி நிறுவனங்களை அடையலாம் கண்டு அங்கே வசதிகளை மற்றும் ஆசிரிய தரத்தை உயர்த்த முற்படுவது. கிராமப்புற மக்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு உருவாக்கவது.

தகுதியான மாணவர்களுக்கும் உதவி செய்ய விரும்புவர்களுக்கும் ஒரு நம்பகமான பாலமாக திகழ்ந்து நற்பணிச் செய்வது. பயன் அடையும் மாணவரின் வளர்ச்சியை கண்காணித்தல். கிராமபுரங்களில் கல்வி நிலையங்களை அமைத்து அவ்வாறு அமைக்கப்பட்ட நிலையங்களை செயல் படுத்தவும் கல்வி கற்பிக்கவும் விருப்பமுடைய நபர்களை அடையாளம் கண்டெடுத்து அவர்களுக்கு தகுந்த பயிற்சியும் தக்க உதவியும் அளித்தல். மாணவர்களுக்கு மென் திறன் பயிற்சியும் முழுமையான ஆளுமை வளர்ச்சியும் அளித்தல். பின் வரும் காலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் ஆளுமை வளர்ச்சியை பயிற்கும் ஒரு கல்வி நிறுவனத்தை நிறுவுதல்.நடவடிக்கைகள் அகரம் பவுண்டேஷன் இச்சமூகத்தில் தலை நிமிர துடிக்கும் ஒவ்வொருவரையும் தேடி பிடித்துஇ அவர்களுக்கு கல்வி என்னும் எதிர்காலத்தை வழங்கி நம்பிக்கையை பதிய விடுகின்றது. இந்த அமைப்பு மக்களின் வாழ்கை மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக உழைக்கின்றது. வசதியற்ற மற்றும் ஆதரவு இழந்த மாணவர்களுக்கு அதிக கவனம் மற்றும் தகுந்த உதவிகள் வழங்கி முன்னெற்ற பாதைக்கு வழிகாட்ட முன்படுகின்றது.இச் செயற்திட்த்தை இலங்கையில் நடைமுறைபடுத்துவதற்கு எடுக்கும் முயற்சி பாராட்டதக்க ஒன்றாகும்.

2 Comments

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

  • மிக மிக மகிழ்ச்சிகள். நம் நாட்டுக்கு உங்களை அன்போடு வரவேற்கக் காத்திருக்கிறோம். கூடவே, அகரம் சேவைக்கான என்னாலான பணி செய்யவும் காத்திருக்கிறேன், ஓர் தமிழ் பற்றெழுத்தாளர் எனும் வகையில். மனம் கனிந்த வாழ்த்துகள்!